`கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும்'

மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வேல்முருகன் ஆர்ப்பாட்டம்
கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மேகேதாட்டு அணை கட்டத் தொடங்கும் கர்நாடக அரசின் முயற்சியையும், அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மற்றும் தஞ்சையில் தலைமை தபால் அலுவலகம் எதிரில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மேகேதாட்டுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடகத்தை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in