வேகமாக நிரம்பும் வைகை அணை... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை
வைகை அணை

தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஐந்து மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைகை அணை
வைகை அணை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் மூளை வைகையாறு, போடி கொட்டக்குடியாரு, முல்லைப் பெரியார் உள்ளிட்ட ஆறுகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வைகை அணைக்கு வினாடிக்கு 2796 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணையில் தற்போது 5446 மில்லியன் கன அடி நீர்த்தேக்கப்பட்டு அணையின் மொத்த உயரமான 71 அடியில் தற்போது 68.05 அடி நீர்மட்டத்தை எட்டியது.

அணையில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட உள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in