கியாஸ் விலை உயர்வை திரும்பப்பெற ராமதாஸ் வலியுறுத்தல்

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும். கியாஸ்க்கான மானியத்தைக் கூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமையல் எரிவாயு விலை மீண்டும் சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1015 ரூபாய் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பத்து தவணைகளாக 305 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு 44 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

ஒருகாலத்தில் சமையல் எரிவாயு விலை 400 ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதற்காக, மானியத்தொகை உயர்த்தப்பட்டு வந்தது. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மானியத்தின் அளவு 435 ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டது. இப்போது மானியம் 24.95 ஆக குறைக்கப்பட்டு விட்டது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். மானியத்தைக் கூட்ட வேண்டும் ”என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in