யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!- தமிழக அளவில் ஸ்வாதிஸ்ரீ முதலிடம்!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!- தமிழக அளவில் ஸ்வாதிஸ்ரீ முதலிடம்!
யுபிஎஸ்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ இந்திய அளவில் 42- வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மத்திய அரசின் குரூப் ஏ மற்றும் குரூப் பி உள்ளிட்ட மத்திய அரசுப் பணியாளர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் யுபிஎஸ்சி எழுத்துத் தேர்வும், ஏப்ரல்-மே மாதத்தில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்ற விவரங்களும் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் 244 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் 73 பேரும், பிற்படுத்தப்பட்டவர்கள் 203 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்தத் தேர்வுகளில் மொத்தமாக 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் ஸ்வாதிஸ்ரீ என்பவர் முதலிடத்தையும், தேசிய அளவில் 42-வது இடத்தையும் பிடித்துள்ளார். தேர்வு முடிவுகள் குறித்துப் பேசிய ஸ்வாதிஸ்ரீ, “நான்கைந்து வருடங்களாகவே தேர்வுக்குத் தயாராகி வந்தேன். கடந்த முறை தேர்வு எழுதும் போது 126-வது ரேங்க் பெற்று ஐஆர்எப் பணிக்குத் தேர்வானேன். மீண்டும் தேர்வு எழுதிய நிலையில் 42-வது ரேங்க் வாங்கி இருக்கிறேன்” என்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in