குடிமகன்களால் இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை: கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் சஸ்பெண்ட்

மாதிரி படம்
மாதிரி படம்

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மதுபானக்கடை விற்பனையாளர்கள் விஸ்வநாதன் மற்றும் அச்சுதமேனன் ஆகிய இருவரை  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விக்ரபாண்டியம் கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு மதுபானம் வாங்க வந்தபோது கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்படுவது தொடர்பாக டாஸ்மார்க் மதுபானக் கடையின் விற்பனையாளருக்கும், மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றிய  நிலையில் ஆத்திரமடைந்த மது பிரியர்கள் ஒன்றிணைந்து மதுக்கடையின் விற்பனையாளர் விஸ்வநாதன் மற்றும் அச்சுதப்பன் இருவரையும் கடையில் உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து பூட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரபாண்டியம் போலீஸார் மது பிரியர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். அதன்பின்னர் அரசு மதுபானக் கடை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது . இது குறித்த தகவல் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக பரவியது.

அதனையடுத்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த அரசு மதுபான கடை விற்பனையாளர்கள் விஸ்வநாதன் மற்றும் அச்சுதமேனன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிட நீக்கம் செய்து டாஸ்மார்க் மேலாளர் சக்தி பிரேம் சந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இப்படி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று குடிமகன்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in