செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Updated on
1 min read

மழை வெள்ளம்  மற்றும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு  திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த  செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் பேருதவியாக இருக்கிறது. 

அப்பகுதியிலுள்ள கடைகோடி கிராமத்தைச் சேர்ந்த பலரின்  குடும்பத்திலும்  முதல் பட்டதாரிகள்  உருவாவதற்கு இப்பல்கலைக்கழகம் முக்கிய காரணியாக உள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுக்கான தேதிகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. மாணவர்களும் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம், அதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி பாரதிதாசன்  பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்

இன்றும் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தலைமையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

மதுரை ஏவி மேம்பாலத்துக்கு 138-வது பிறந்த நாள்... பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

HBD LR Eswari: இசையுலகின் பட்டத்துராணிக்கு பிறந்தநாள்!

முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in