மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தை இன்று திறந்து வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ``மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இதுவரை கட்டணமில்லா பேருந்துகளில் 375 கோடி இலவச பயணம் நடந்துள்ளது. புதுமை பெண் திட்டம் மூலம் அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாதவற்றையும்கூட திமுக அரசு செய்து வருகிறது" என்று கூறினார்.
இந்த விழாவில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே... உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்
மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!
http://hindutamilthisai.comwww.kamadenu.inRajavel Devaraj
Principal Stylist
Hindu Tamil Thisai - Kamadenu
KSL Media Limited124 Wallajah Road, Chennai 600 002T: +91 - 44 - 3504 8069
M: +91 - 740 141 9555