
திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் முனைவர் ரியா, தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேட்ரினா, இயன் முறை மருத்துவர்கள் செல்வி சந்தோசம் மற்றும் மோனிகா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உடனிருந்தார்.
திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ம் தேதியை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட தமிழக அரசு 2011 மார்ச் 11-ல் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.