தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

இனி ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்
தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வரும் கரோனா இன்னும் உலகம் முழுவதையும் பீதியில் வைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கரோனா பரவில் அதிகரித்ததோடு, பல உயிர்களை காவு வாங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பலர் தங்கள் வேலையை இழந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர்.

கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், ரயில் சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி வரும் 10-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என்றும்

ஏப்ரல் 16-ம் தேதி முதல், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம் என்றும் இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in