போக்குவரத்துத்துறைக்கும், காவல்துறைக்கும் மோதல் போக்கா? - அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அடுத்தடுத்து அபராதம்!

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலர்கள்
அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலர்கள்
Updated on
2 min read

நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என்று காவலர் ஆறுமுகப்பாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் எதிரொலியாக, அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அரசுப்பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அரசு பேருந்துக்கு அபராதம் விதிக்கும் போலீஸார்
அரசு பேருந்துக்கு அபராதம் விதிக்கும் போலீஸார்

கடந்த 21ம் தேதி அன்று, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அரசுப்பேருந்தில் ஏறிய ஆயுதப்படை காவலர் ஆறுமுகப்பாண்டியனிடம், டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அதற்கு, "அரசு பணியில் உள்ள அனைவருக்கும் அரசு பேருந்தில் டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது" என்று ஆறுமுகப்பாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே டிக்கெட் எடுக்க தேவையில்லை" என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது. மேலும், ஆறுமுகப்பாண்டி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படியும் பரிந்துரை செய்திருந்தது.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலர்கள்
அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலர்கள்

இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து போலீஸார், அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், இன்று திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அரசு பேருந்து ஓட்டும்போது சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக 3 ஓட்டுநர்களுக்கு தலா ரூ.500-யை போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். வள்ளியூர் அருகே காவலர் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்தது சர்ச்சையான நிலையில், காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in