தமிழகத்தில் நுழைந்தது தக்காளி வைரஸ்! - தடுப்புப் பணிக்குத் தயாராகும் சுகாதாரத்துறை!

தக்காளி வைரஸ்
தக்காளி வைரஸ்

தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் பத்து குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய வகை வைரஸ் பரவல் தமிழக மக்களைக் கலங்க செய்துள்ளது.

கேரளத்தில் குழந்தைகளை குறிவைத்து தக்காளி வைரஸ் என்னும் புதிய வகை வைரஸ் பரவிவருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை வலி ஏற்பட்டு, உணவு விழுங்க முடியாமல் சிரமப்படுவார்கள். மேலும் தோல் பகுதிகளில் சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றும். வைரஸால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. “தக்காளிக்கும் வைரஸுக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் யாரும் தக்காளி வைரஸால் பாதிக்கப்படவில்லை. எவ்வகை வைரஸ் வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது“ எனக் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை
குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை

இந்நிலையில் கேரளத்திலிருந்து கோவை வரும் பயணிகள், வளையாறு சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில் கோவை மாநகாட்சி பகுதிகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களைத் தனிமைபடுத்தும் மையம் எதுவும் அமைக்கப்படவில்லை. “பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. 7 நாள்களில் அவர்கள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவார்கள். தக்காளி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், முதல் சிகிச்சையாக வெந்நீர் அருந்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனக் கோவை சுகாதாரத்துறையினர் எச்சரிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in