இன்றைய இளைஞர்கள் ஸ்வீட் பீடா தான் போடுகிறார்கள்!: காரணத்தைச் சொல்லும் அமைச்சர்

இன்றைய இளைஞர்கள் ஸ்வீட் பீடா தான் போடுகிறார்கள்!: காரணத்தைச் சொல்லும் அமைச்சர்

இன்றைய இளைஞர்களிடம் வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து விட்டது. ஸ்வீட் பீடாவை தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, பெரியகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் பேசுகையில், " பெரியகுளம் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன் வருமா?" என்று கேட்டார்.

விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேசுகையில்," காட்டுமன்னார்கோவில் தொகுதியில் உள்ள லால்பேட்டையில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசுகையில், " கடந்த காலங்களில் பெரியகுளம், லால்பேட்டை, கும்பகோணம் வெற்றிலை எல்லாம் சிறப்பு பெற்று இருந்தது. உணவு சாப்பிட்டாலே வெற்றிலை சாப்பிடுவார்கள். ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் வெற்றிலை போடுவதில்லை. ஆனால், ஸ்வீட் பீடா தான் சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து விட்டது. ஆனாலும், வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதன் மூலம் 778 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.