குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனி பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பதவியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெறுகிறது. குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தவறு செய்தவர்கள் தங்களது பிழையை திருத்திக்கொள்ளவும் 23-ம் தேதி (இன்று) வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்.

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்பவர்கள் முழு விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in