தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு! கதறும் இல்லத்தரசிகள்!

இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
Updated on
1 min read

ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கும், ஒரு சவரன் 43,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 47,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in