நிலங்களைக் கையகப்படுத்த 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

அமைச்சர் எ.வ.வேலு தகவல்
நிலங்களைக் கையகப்படுத்த
5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகம் முழுவதும் சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்வதற்காக 5 சிறப்பு டிஆர்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசுகையில், " மணப்பாறையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 7.5 கி.மீ நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டவுடன், நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று, பின் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கும்" என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் ரயில்வே லைன் மீது மேம்பாலம் அமைத்தல், சுரங்க பாலம் அமைத்தல் மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் எழும் சிக்கல்கள், தாமதமாவதோடு திட்டச் செலவுகளும் உயர்கிறது. இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்வதற்காக 5 சிறப்பு டிஆர்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in