
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துவருகிறார். இதில் விளையாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகளை செய்தார்.
ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதே தமிழ்நாட்டின் நெடுங்கால கனவாக நீடித்துவருகிறது. அந்த கனவை நினைவாக்க ரூ.25 கோடியில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.25 கோடியில் தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்க தேடல் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.