முதன் முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி- ரூ. 293.26 கோடி#TNBudget2022

முதன் முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி- ரூ. 293.26 கோடி#TNBudget2022

தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துவருகிறார். இதில் விளையாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகளை செய்தார்.

பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை, முதன்முறையாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த சீரிய முயற்சியால் சென்னையில் சதுரங்க ஒலிம்பியாட் நடைபெறவிருக்கிறது என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 சதுரங்க விளையாட்டு வீரர்கள் சென்னை சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது தமிழக விளையாட்டுத்துறையில் திருப்புமுனையாக அமையும். இதற்கென 293.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.

Related Stories

No stories found.