கரோனாவுக்கு மத்தியில் நாளை திறக்கப்படுகின்றன பள்ளிகள்!

மாணவிகள்
மாணவிகள்hindu கோப்பு படம்

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 25 ஆயிரம் இருக்கும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா 3-வது அலையால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு மேலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்திலும் 30 ஆயிரத்தை தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு இன்று தினசரி பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதனிடையே, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த 29-ம் தேதி அறிவித்தது.

தனியார் பள்ளிகள் இன்று முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை தேர்வுகள் நடைபெறும்பட்சத்தில் மாணவர்கள் எப்படி தேர்வு எழுதுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. படிப்பதற்கு வசதியாக தேர்வுகளை ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் முன்புபோல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in