தமிழகத்தை குறிவைக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தமிழகத்தை குறிவைக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Updated on
1 min read

அடுத்த வாரத்தின் மத்தியில் வங்கக் கடலில் மையம் கொள்ள வாய்ப்புள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்தும், அது தமிழகத்தை குறிவைக்கும் வாய்ப்பு குறித்தும் புதிய தகவல்களை மண்டல வானியல் ஆய்வு மையம் இன்று(நவ.4) வழங்கியுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடலில் நவ.9 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த தாழ்வு மண்டலம் உறுதியானால், அதற்கடுத்த தினங்கள் தமிழகத்தின் வடமேற்கு கடற்கரை மற்றும் புதுவையை அது ஆக்கிரமிக்கும். அந்த வகையில் நவ.10 மற்றும் 11 ஆகிய தினங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. எனவே நவ.9 முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளார்கள்.

நவ.4 காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர மழை பொழிவை பொறுத்தவரை, சென்னையின் தண்டையார்பேட்டையில் அதிகளவாக 14 செமீ மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக கோவை மேட்டுப்பாளையத்தில் 12 செமீ, வேதாரண்யம் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 10 செமீ, சென்னை பெரம்பூரில் 9 செமீ என மழை பெய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in