`வெட்கக்கேடானது; நியாயமற்றது'

11 மருத்துவக் கல்லூரி குறித்து திமுகவை சாடும் ஓபிஎஸ்
ஓபிஎஸ்
ஓபிஎஸ்hindu

"ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை துவக்கிய அதிமுகவின் சாதனையை தனது சாதனையாக திமுக பறைசாற்றிக் கொள்வது கூறுவது வெட்கக்கேடானது; நியாயமற்றது" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு திட்டமிடுதலும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு திமுக ஆட்சி. மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி மத்திய அரசுடன் திமுக நெருக்கமாக, செல்வாக்காக, இருந்த இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவாரூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 3 மருத்துவ கல்லூரிகள்தான் திறக்கப்பட்டன.

திமுக தலைவர் நினைத்திருந்தால் அப்போதே அனைத்து மாவட்டங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளை பெற்று இருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதற்கான பெருமையை திமுக பறைசாற்றி கொள்வதில் ஒரு அர்த்தம் இருக்கும். இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் பாதிக்காத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் என்று சாதனையை அதிமுக செய்திருக்கிறது என்றால், பாராட்ட மனம் இல்லாமல் கலைஞரின் கனவு நிறைவேறி இருக்கிறது என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் கனவு, அதிமுகவின் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றைக்கு மருத்துவத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்க கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதிமுகதான்.

மருத்துவக் கல்லூரி திறப்பு விழா
மருத்துவக் கல்லூரி திறப்பு விழா

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒரு படி மேலே போய் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரியிலேயே அரசு ஆணை திமுக ஆட்சியில் இருக்கும்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு தாங்கள்தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அதிமுகவால்தான் இது தாமதமானது. அதுமட்டுமின்றி அதிமுகவால்தான் மருத்துவக்கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டிக் கொள்வது நியாயமில்லை என்று கூறியிருக்கிறார். ஆட்சியை விட்டு போகும் தருவாயில் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு அரசாணை வெளியிட்டுவிட்டு, அதை ஒரு சாதனை என்று கூறுவது வெட்கக்கேடானது; நியாயமற்றது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது பொதுநல கோரிக்கையான மாநில சுயாட்சி குறித்தோ, கல்வியை மாநிலப் பட்டியலில் எடுத்து வருவது குறித்தோ, தமிழ்நாட்டிற்கான மத்திய வரி பகிர்வு குறைந்து கொண்டே வருவது குறித்தோ, மேல் வரி குறித்த மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி குறித்தோ, வாய் திறக்காமல் அமைதியாக இருந்துவிட்டு சாதனை படைத்திட்ட அதிமுகவை குறை கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப திமுக என்கின்ற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் அதிமுக என்ற பொதுநலம் வீறுகொண்டு எழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in