பயங்கரவாதி என முத்திரை குத்திய ஆளுநர்: கொந்தளித்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

பயங்கரவாதி என முத்திரை குத்திய ஆளுநர்: கொந்தளித்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று தமிழக ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டையே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சீர்குலைக்கிறது. மாணவர்கள், மனித உரிமை இயக்கங்கள் போல் முகமூடி அணிந்து இயங்கி வருகின்றனர். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது. அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியாவில் தாக்குதலில் ஈடுபட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆள் அனுப்புகிறது. இந்த அமைப்பை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் அச்சுறுத்தல்" என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நாளை மாலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளதோடு, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்சின் குரலாக ஒலிக்கிறார் என்று குற்றச்சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in