முக்கிய அறிவிப்பு... தீபாவளி பண்டிகைக்காக நவ. 5-ம் தேதி ஞாயிறன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

ரேஷன் கடை
ரேஷன் கடை

தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகிற 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான வணிக சாலைகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் இயங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5-ம் தேதி, ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in