`தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது'

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், கரோனா நோயாளிகள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர். 5 மணிக்கு முன் வந்த பொது வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசி டிஜிபி சைலேந்திர பாபு, "தமிழகம் முழுவதும் இன்று மிகவும் அமைதியான முறையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரி செய்யப்பட்டது. சில நிகழ்வுகள் குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குசாவடிகளைில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in