திருவள்ளூர், கரூர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

திருவள்ளூர், கரூர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

திருவள்ளூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும், கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் ஆட்சியராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிற்கல்வி ஆணையராக வீரராகவராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல், நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமனம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in