இந்த நாட்களில் இடி, மின்னலோடு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்த நாட்களில் இடி, மின்னலோடு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமான அளவில் பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக, இன்று முதல், வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21  ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 20  மற்றும் 21 தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, அன்றைய தினங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in