அச்சுறுத்தும் அசானி புயல்: சென்னையிலிருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து

அச்சுறுத்தும் அசானி புயல்: சென்னையிலிருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து

அச்சுறுத்தி வரும் அசானி புயலால் சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டிருந்த அசானி புயல் தீவிர புயலாக வலுவிழந்தது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் இன்று ஆந்திர கடலோர மாவட்டங்களை தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அசானி புயல் காரணமாக சென்னைக்கு வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.