திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
திருப்பத்தூர் அருகே கொரட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய கழிவறை வசதி இல்லை என தொடர்ந்து மாணவர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
இதனை அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று, 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட கப்பல் வடிவ கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது. இதில் நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் உள்ளடக்கிய எட்டு கழிவறைகள் உள்ளன. இந்த கப்பல் வடிவிலான கழிவறை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?