அனைத்து பாடலாசிரியர்களுக்கும் திருமா திடீர் அழைப்பு: காரணம் என்ன?

அனைத்து பாடலாசிரியர்களுக்கும் திருமா திடீர் அழைப்பு: காரணம் என்ன?

கட்சிக் கொள்கை, கோட்பாடுகளைக் கருப்பொருளாகக் கொண்ட வாழ்த்துப் பாடல்கள் தேவை என பாடலாசிரியர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்சி மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் தொடக்கம் மற்றும் நிறைவில் இசைப்பதற்கென தனித் தனியே இரு பாடல்கள் தேவை. இவை பாவலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அவற்றில் இரண்டு பாடல்கள் தேர்வு செய்யப்படும். பாவலர் அறிவுமதி தலைமையில் தேர்வுக்குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படும். பாடல்கள் மற்றும் தேர்வு குறித்த வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும். ஜூன் 30-ம் தேதிக்குள் பாடல்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி அறிவிக்கப்படும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in