‘நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்' - முத்துராமலிங்கத் தேவருக்குப் புகழாரம் சூட்டிய முதல்வர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

நாட்டு விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கரத்தை வலுப்படுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும், 60-வது குருபூஜை விழா பசும்பொன்னில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதுகுவலி காரணமாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள முடியாததால் நேரில் வர இயலவில்லை. இந்நிலையில், அமைச்சர்கள் மரியாதை செலுத்தும் படத்தை தன் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில்,‘கொடுங்கோல் சட்டத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கரத்தை வலுப்படுத்தியவர், தென்னகத்து போஸ், ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், வீரத்தையும் நற்பண்புகளையும், நன்றியோடு நினைவுகூருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in