தேனி: ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தேனி: ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்தில் ரூ.114 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.74.21 கோடி மதிப்பிலான 102 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளை முதல்வர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்எல்ஏகள், தேனி கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகளின பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in