மின்சாதனங்களை மாணவர்களைக் கொண்டு இயக்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை

மாணவர்களை கொண்டு பள்ளிகளில் உள்ள மின்சாதனங்களை இயக்கக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் - மாணவர்கள்
ஆசிரியர் - மாணவர்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது.

பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in