‘மில்லிங்’ செய்யாமல் சாலை போடக்கூடாது; முதல்வர் கண்டிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்தி இந்து

தமிழகத்தில் புதிதாகப் போடப்படும் சாலைகளை இனிமேல் மில்லிங் செய்யாமல் போடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.

‘‘கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் சரியாக அமைக்கப்படாத சாலைகளை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அவரவருடைய சொந்த செலவிலேயே சரிசெய்ய வேண்டும்’’ என்று சென்னை மாநகராட்சிக்கு, சமீபத்தில் மாநில தகவல் ஆணையர் சு. முத்துராஜ், உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்படி அடையாறு பகுதியில் சில சாலைகளை ஒப்பந்ததாரர்கள் சீர் செய்யும் பணிகளை, தலைமச் செயலாளர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் அதிகாரிகள் இரவு நேரத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, இரவு நேரங்களில் சாலை போடும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் முதல்வர். அதுகுறித்து, இன்று முதல்வர் கூறியிருப்பதாவது: “சென்னையில் சாலை போடும் பணிகளை இரவில் நேரில் ஆய்வுசெய்து, ‘மில்லிங்’ செய்யாமல் சாலை போடக்கூடாது என்று ஏற்கெனவே அறிவித்துள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வுசெய்து அறிவுறுத்தி உள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்தபிறகே, சாலை போடும் பணிகளை மேற்கொள்ளும்படி மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in