தேஜ் புயல் எதிரொலி... 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!

5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

’தேஜ்’ புயல் அதி தீவிரமானதை அடுத்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய 'தேஜ்' புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை மறுநாள் ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் கன மழையும், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in