நரிக்குறவ மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்!

நரிக்குறவ மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்!

சென்னை திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவ மாணவி ஒருவரின் வீட்டில் உணவு சாப்பிட்டார்.

சென்னை திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக்காப்பீடு, முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார். ஏற்கெனவே வீடியோ அழைப்பில் நரிக்குறவ மாணவி திவ்ாய, முதல்வரை வீட்டிற்கு அழைத்திருந்தார். கட்டாயம் வருவதாக முதல்வரும் உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து இன்று அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற முதல்வர், அங்கு உணவு மற்றும் தேநீர் அருந்தினார். முன்னதாக நரிக்குற மாணவிகள், முதல்வருக்கு பாசிமாலை அணிவித்தும், பூ கொடுத்தும் வரவேற்றனர். அப்போது அவர் கூறுகையில், "இதுபோன்ற நிகழ்வில் பங்கேற்பதுதான் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும் எத்தனையோ விழாவில் பங்கெடுத்துள்ளேன். உங்களைப் போன்ற அன்பானவர்கள் கொடுக்கும் வரவேற்பும், இதுபோன்ற உபசரிப்புகளும் தான் மகிழ்ச்சியளிக்கிறது. விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு துணை நிற்கும்" என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in