எகிறும் தங்கத்தின் விலை: ஒரு சவரன் 40,440 ரூபாய்

எகிறும் தங்கத்தின் விலை: ஒரு சவரன் 40,440 ரூபாய்

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாலையில் இதன் விலையில் மாற்றம் இருக்கும்.

கடந்த 4 மாதமாக தங்கம் விலை ஒரு நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 5ம் தேதி ஒரு சவரன் ரூ.39,760க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,055க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 உயர்ந்து ரூ. 75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும், இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து வருகிறது. பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலையிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.13 டாலராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 சதவீதம் உயர்ந்து 139.13 டாலரை எட்டியுள்ளது. கச்சா விலை இந்த அளவுக்கு உயர்வது 14 ஆண்டுகளில் இல்லாதது ஆகும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in