'அண்ணே, மதுரைக்கு பொழுதுபோக்கே நீங்க தானே!' : செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை!

'அண்ணே, மதுரைக்கு பொழுதுபோக்கே நீங்க தானே!' : செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை!

"மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ தான்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியது உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலையை உருவாக்கியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, "மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், "மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, "மதுரையில் எந்த பொழுதுபோக்கு வசதியும் இல்லை. மதுரையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால், பொழுதுபோக்க இடமே இல்லை என்று தெரிவித்தார். அப்போது பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த விஷயம்" என்று தெரிவித்தார். இதைக் கேட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in