உங்கள் வங்கிக் கணக்கில் 756 கோடி ரூபாய் பேலன்ஸ் உள்ளது... மெசேஜால் மெர்சலான இளைஞர்!

கணேசன்
கணேசன்

தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் இருப்பு  756 கோடி ரூபாய் உள்ளதாக வங்கியிலிருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (29).  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்டில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கி கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், கணேசன் நேற்றிரவு தனது நண்பர் ஒருவருக்கு தனது அக்கவுண்ட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். 

இந்த பரிமாற்றத்தைத் தொடர்ந்து  வங்கியில் இருந்து கணேசனுக்கு வந்த குறுந்தகவலில் அவரது  அக்கவுண்டில், 756 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாக விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந் தகவலைப் பார்த்த கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து கணேசன் இன்று காலை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் தனக்கு வந்த குறுந்தகவலைக் காட்டி கேட்டுள்ளார். அவர்கள் விசாரித்து விட்டு போன் செய்வதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனால் கணேசன் தனது அக்கவுண்டில் பணம் தொடர்பாக ஆய்வு செய்ததில், அதில் 756 கோடி ரூபாய் பணம் இருப்பதாக காட்டவில்லை. அவரது சேமிப்புத் தொகையை மட்டுமே காட்டியுள்ளது.

இதுகுறித்து கணேசன் கூறுகையில், எனது அக்கவுண்டில் சுமார் 15,000 ரூபாய் வைத்திருந்தேன். நண்பர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் பணம் அனுப்பியது 'பெயில்டு' என மெசேஜ் வந்தது. பின்னர் எனது அக்கவுண்டிற்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மற்றொரு மெசேஜ் வந்தது. அதில் என்னுடைய அக்கவுண்டில் இருப்பு தொகையாக 756 கோடி ரூபாய் இருப்பதாக மெசேஜ் வந்தது. இதைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் தகவல் அளித்து விட்டேன். ஆனால், ஊழியர்கள் விசாரித்து விட்டு உங்களுக்கு போன் செய்கிறோம் என என்னைத் திருப்பி அனுப்பி விட்டனர்" என்று தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் டாக்சி ஓட்டுநருக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அக்கவுண்டுக்கு அனுப்பப்பட்டிருந்த விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில்  தற்போது தஞ்சாவூரில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in