குழாய் மூலம் வீட்டுக்கே வருகிறது கியாஸ் : தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

குழாய் மூலம் வீட்டுக்கே வருகிறது கியாஸ் : தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு (கியாஸ்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் இன்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், " கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரம் தொழிற்சாலைகளின் மையமாக உருவாகி உள்ளதால் அங்கு புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது " என்று கூறப்பட்டுள்ளது.

"சென்னை அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் சமர்ப்பித்துள்ளது. விமான போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் 38 மாவட்டங்களில் 2,785 விற்பனை நிலையங்கள் மூலம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டில் மேற்கொண்ட 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 திட்டங்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சதவீதம் ஆகும். வலிமை சிமென்ட் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 39,239 மெட்ரிக் டன் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in