அதிர்ச்சி... ஊராட்சித் தலைவரின் செருப்பை கையில் எடுத்து வந்து கொடுத்த விவசாயி; கலெக்டர் ஆய்வில் அவலம்

அதிர்ச்சி... ஊராட்சித் தலைவரின் செருப்பை கையில் எடுத்து வந்து கொடுத்த விவசாயி; கலெக்டர் ஆய்வில் அவலம்
Updated on
1 min read

மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலே தனது செருப்பை எடுத்து வருமாறு விவசாயி ஒருவரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் திருமலை சமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று ஆய்வு செய்துள்ளார். நூலகம், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது வட்டாட்சியர் சக்திவேல், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இந்தநிலையில், நூலக வாசலில் விட்டுச்சென்ற தனது செருப்பை எடுத்து வருமாறு விவசாயி ஒருவரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, நூலக வாசலில் கிடந்த செருப்பை ஆய்வு நடைபெறும் இடம் வரை விவசாயி கையில் எடுத்துச் சென்று ஊராட்சி மன்றத் தலைவருடன் கொடுத்தார். அந்த செருப்பை அணிந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆட்சி அவருடன் ஆய்வுக்கு சென்றார். ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த செயலை அங்கிருந்த அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. விவசாயி ஒருவரை மரியாதை குறைவாக ஊராட்சி மன்றத் தலைவர் நடத்திய செயல் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in