இலங்கை மக்களுக்கு தனது ஒருநாள் ஊதியத்தை வழங்கினார் டிஜிபி

காவலர்களும், அதிகாரிகளும் நிதியுதவி வழங்க வேண்டுகோள்
இலங்கை மக்களுக்கு தனது ஒருநாள் ஊதியத்தை வழங்கினார் டிஜிபி

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இலங்கை மக்களின் துயரை துடைக்கும் வகையில் தமிழக முதல்வர், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்.

முதல்வரின் வேண்டுகோளின்படி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவோருக்கு உரிய வருமான வரி விலக்கு அளிக்கப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான் என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகிறேன். மனிதாபிமான அடிப்படையில் நிவாரண நிதி வழங்க விரும்பும் காவலர்கள்

அதிகாரிகள் தங்களால் இயன்ற பண உதவியை செய்தி மக்கள் தொடர்புத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ, காசோலை, வரைவு காசோலை மூலமாகவோ வழங்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in