பேரறிவாளனை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்: ஒரு நெகிழ்ச்சி தருணம்

பேரறிவாளனை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்: ஒரு நெகிழ்ச்சி தருணம்

சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பேரறிவாளன், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதல்வருக்கு அற்புதம்மாள், பேரறிவாளன் மற்றும் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in