உடல் உறுப்புதானம் செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை!

அரசு சார்பில் மரியாதை
அரசு சார்பில் மரியாதை

தென்காசி அருகே உடல் உறுப்புதானம் செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், இராயகிரி அருகிலுள்ள உள்ளார்பகுதியை சேர்ந்தவர் சண்முகத்துரை. உடல் நிலை பாதிப்பால் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சண்முகத்துரை அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சண்முகத்துரை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினார் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரை என்பவரின் உடலுக்கு இறந்தவரின் சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in