குட்நியூஸ்... ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு!

குட்நியூஸ்... ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு!
Updated on
1 min read

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதைதொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in