நவ.5 முதல் ஜவுளி தொழில் உற்பத்தி நிறுத்தம்; பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு!

நவ.5 முதல் ஜவுளி தொழில் உற்பத்தி நிறுத்தம்; பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு!

நவம்பர் 5-ம் தேதி முதல் திருப்பூர் மற்றும் கோவையில் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்திகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயம்தான் பிரதானம் என்றாலும் அதற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் முக்கிய இடம் வகிக்கிறது. பஞ்சாலைகள், நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள்,  விசைத்தறி, கைத்தறி போன்றவை வாயிலாக பலரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

அதிலும் கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாக ஜவுளித்தொழில் உள்ளது. ஆடைகள் ஏற்றுமதி செய்து டாலரின் வருமானம் ஈட்டுவதால் திருப்பூர் டாலர் சிட்டி என்றே அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், நூல் விலையேற்றம், மின் கட்டண உயர்வு போன்றவற்றால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் என ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மற்றும் கோவையில் வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலையேற்றம் மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து நவம்பர் 5 முதல் 25-ம் தேதி வரை 20 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in