சார்பதிவாளர் அலுவலகங்களில் தத்கல் முறையில் பத்திரப்பதிவு: புதிய அரசாணை வெளியீடு!

சார்பதிவாளர் அலுவலகங்களில் தத்கல் முறையில் பத்திரப்பதிவு: புதிய அரசாணை வெளியீடு!
பத்திரம்

பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ளும் வசதியாக தட்கல் பத்திரப் பதிவு நடைமுறையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அரசாணையை பத்திரப் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தட்கல் முறை பத்திரப்பதிவு திட்டத்தின் படி, தட்கல் டோக்கன்கள் நேர இடைவெளியின் முடிவில் செயல்படுத்தப்படும். தட்கல் டோக்கன்களும் தற்போதைய செயல்முறையைப் போலவே நடைமுறைப்படுத்தப்படும். இந்த முறைப்படி தற்போதைய டோக்கன்களுடன் தட்கல் டோக்கன்களாக எந்த நாளிலும் கூடுதலாக டோக்கன்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் இல்லை என்றால் மற்றும் முன்பதிவு செய்யும் நாளில் மறு திட்டமிடப்பட்ட நேரம், டோக்கன் செல்லாது. மேலும் செலுத்தப்பட்ட தட்கல் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது.

தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதல்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும். இதற்காகத் தினசரி அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக பத்து தட்கல் பத்திரப்பதிவு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in