`மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்'- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புகழாரம்

`மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்'- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புகழாரம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக, வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாெடங்கி வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகப்பிரிவு கட்டடத்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடிக்கல் நாட்டினார். மேலும் நாமக்கல், விழுப்புரம், சங்கராபுரம் நீதிமன்ற கட்டிடம் ஆகியவை திறந்து வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், "மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பூர்த்தி செய்யும். உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

வழக்கறிஞர்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னேடுப்புகளை எடுத்து வருகிறார். சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் விரைந்து பரிந்துரைகளை அனுப்பும் என்று நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக ஐந்து வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு சேமநல நிதி தலா ரூ.7 லட்சம் வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும். திருவண்ணாமலை, திருவாரூரில் கீழமை நீதிமன்றங்கள் அமைக்கப்படும். வாடகை கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கட்டடம் கட்டப்படும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, வணிக நீதிமன்ற முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.