அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள்
அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகளில் குறை உள்ளதா? உடனே டயல் பண்ணுங்க.. புகார் எண் அறிவித்தது தமிழக அரசு!

தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் ஏதேனும் குறைகள் மற்றும் புகார் இருந்தால் ’149’ என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் வெளியூர் திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 13ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், பேருந்து மூலம் பயணிப்பவர்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், 'அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் 1800 599 1500" என்ற 11 இலக்க எண் கடந்த மார்ச் 9ம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.

தமிழக அரசு
தமிழக அரசு

பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், நாளை (நவம்பர் 10) முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் 149 அறிமுகப்படுத்தப் படுகிறது. மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in