`வங்கிப் பணியாளர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை'- அதிர்ச்சி அளித்த ஐபிபிஎஸ்

`வங்கிப் பணியாளர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை'- அதிர்ச்சி அளித்த ஐபிபிஎஸ்

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணியாற்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மூலமாக 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 400க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி, “ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலுள்ள வங்கிகளில் 20 முதல் 30 விழுக்காடு வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்தார்கள். இந்த எண்ணிக்கை 50 விழுக்காடாக தற்போது அதிகரித்துள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 சதவீதத்திற்கு மேல், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெரியாத வெளிமாநில பணியாளர்களால், வாடிக்கையாளர் சேவை முற்றிலும் பாதிப்படைகிறது” என்றார்.

பிற மாநிலத்தில் பணியில் சேரும் அரசு மற்றும் பொது நிறுவன ஊழியர்கள் மூன்று மாதத்தில் அந்த மொழியைக் கற்ற வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனாலும் பல வருடங்களாகத் தமிழகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தமிழைக் கற்றுக் கொள்வதில்லை. அவர்களைத் தகுதி நீக்கம் செய்யாமல் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in