காவல் துறை உயரதிகாரிகள் 44 பேர் பணி மாற்றம்!

காவல் துறை உயரதிகாரிகள் 44 பேர் பணி மாற்றம்!

தமிழகத்தில் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் உட்பட காவல் துறை உயரதிகாரிகள் 44 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை எஸ்பி-யாக கார்த்திகேயன், கரூர் எஸ்பி-யாக சுந்தரவதனம், மதுரை எஸ்பி-யாக சிவபிரசாத், திருவாரூர் எஸ்பி-யாக சுரேஷ்குமார், திருவண்ணாமலை எஸ்பி-யாக கார்த்திகேயன், ராமநாதபுரம் எஸ்பி-யாக தங்கதுரை, திண்டுக்கல் எஸ்பி-யாக பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி சில தினங்களுக்கு முன் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது அங்கு அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி-யாக தேன்மொழி நியமிக்கப்பட்டிருக்கிறார். காத்திருப்புப் பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவை காவல் ஆணையராக கோபாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமார், மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்பி-யாக வருண் குமார், அண்ணா நகர் துணை ஆணையராக விஜயகுமார், வடக்கு மண்டல ஐஜி-யாக சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி-யாக முத்தரசு, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி-யாக ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in