`தமிழ்நாடு வணிக வாய்ப்புகள் நிறைந்த மாநிலம்; வாருங்கள் ஒன்றாக பயணிப்போம்'

ரூ.1,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
`தமிழ்நாடு வணிக வாய்ப்புகள் நிறைந்த மாநிலம்; வாருங்கள் ஒன்றாக பயணிப்போம்'

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ரூ.1,600 கோடியில் ஐக்கிய அமீரக முதலீட்டார்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

4 நாள் அரசு முறை பயணமாக துபாய் செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று உலக கண்காட்சி மையத்தில் தமிழ்நாடு அரங்கை திறந்துவைத்தார். இதன் பின்னர் இன்று துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க ரூ.6,100 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக துபாய் உள்ளது. துபாய் நகரை காண ஆண்டு தோறும் 17 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடாக உள்ளது. பண்பாட்டு ரீதியிலும், வணிக ரீதியிலும் தமிழ்நாடு- துபாய இடையே நல்லுறவு நீடிக்கிறது.

முதல்வராக நான் பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது. தமிழகத்தில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. தமிழ்நாடு வணிக வாய்ப்புகள் நிறைந்த மாநிலம். தூத்துக்குடியில் 1180 ஏக்கரில் நவீன சர்வதேச அறைகலன் பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் சர்வதேச அறைகலன் பூங்கா தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ளது. பெரிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் நவீன கட்டமைப்புகளை தமிழ்நாடு கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2-வது பெரிய துறைமுகமாகவும், இந்தியாவின் 3-வது புதிய துறைமுகமாகவும் தூத்துக்குடி விளங்குகிறது. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் நவீன கட்டமைப்புகளை தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும், துபாய்க்குமான பிணைப்பு ஏற்கெனவே உணர்வுப்பூர்வமாக உள்ளது. வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலமான எங்களுடன் சேர்ந்து ஒன்றாக வளர்வதற்கு அழைப்புவிடுக்கிறேன். வாருங்கள் ஒன்றாக பயணிப்போம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in